ஹுருன் அமைப்பின் 30 வயதிற்குட்பட்ட தொழில்முனைவோர் பட்டியல் 2025
July 22 , 2025 26 days 65 0
செப்டோவின் இளம் நிறுவனர்களான கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் பாலிச்சா, முதலாவது அவென்டஸ் வெல்த் - ஹுருன் இந்தியா அமைப்பின் 2025 ஆம் ஆண்டிற்கான 30 வயதிற்குட்பட்ட தொழில்முனைவோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
இந்தப் பட்டியல் ஆனது அவென்டஸ் மற்றும் ஹுருன் இந்தியா அமைப்பின் பரந்த "Uth -குறிப்பிட்ட வயதிற்குட்பட்டவர் பட்டியல் தொடரின்" அறிமுகத்தைக் குறிக்கிறது.
இது 35 வயதிற்குட்பட்ட மற்றும் 40 வயதிற்குட்பட்ட குழுக்களுக்கான எதிர்காலத்தின் பதிப்புகளையும் கொண்டிருக்கும்.
இந்த ஆண்டு குழுவில் தொழில்நுட்பம், சில்லறை விற்பனை, சுகாதாரம், விண்வெளி, தளவாடங்கள், நிதித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் முதல் முறையான நிறுவனர்கள் மற்றும் மரபார்ந்த தலைவர்கள் உள்ளனர்.
மற்ற இளம் நபர்களில் A.V.R. ஸ்ரீ ஸ்மரன் (A.V.R. ஸ்வர்ண மஹால் ஜுவல்லர்ஸ்), அர்ஜுன் தேஷ்பாண்டே (ஜெனரிக் ஆதார்), மற்றும் மிஹிர் மெண்டா (R.M.Z.), திகந்தராவின் ராகுல் ராவத் மற்றும் ஸ்விஷ் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் உஜ்வால் சுகேஜா, சரண் S மற்றும் அனிகேத் ஷா ஆகியோர் அடங்குவர்.