ஹுருன் இந்தியா அமைப்பின் 35 வயதுக்குட்பட்ட தொழில்முனைவோர் பட்டியல் 2024
October 2 , 2024 443 days 416 0
இஷா அம்பானி மற்றும் டாடில் நிறுவனத்தின் இணை நிறுவனர் பரிதா பரேக் ஆகியோர் 2024 ஆம் ஆண்டிற்கான ஹுருன் இந்தியா அமைப்பின் 35 வயதுக்குட்பட்ட தொழில்முனைவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இளம் பெண்கள் ஆவர்.
இந்தப் பட்டியலில் 35 வயதுக்குட்பட்ட 150 இந்திய தொழில்முனைவோர் இடம் பெற்று உள்ளனர்.
ஆகாஷ் அம்பானி மற்றும் மாமா எர்த் நிறுவனத்தின் கஜல் அலக் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
பிசிக்ஸ் வாலா நிறுவனத்தின் நிறுவனர் அலக் பாண்டே மற்றும் அஞ்சலி மெர்ச்சன்ட் ஆகியோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
ஷேர்சாட் இணை நிறுவனர் அங்குஷ் சச்தேவா இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இளம் நபர் ஆவார்.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மொத்தத் தொழில்முனைவோரில் சுமார் 82 சதவீதம் பேர் முதல் தலைமுறையினை சேர்ந்த வணிகத் தலைவர்கள் ஆவர்.
பெங்களூரு மற்றும் மும்பை ஆகியவை முறையே இந்தப் பட்டியலில் 29 மற்றும் 26 வணிகத் தலைவர்களைக் கொண்டு மிகவும் அதிக எண்ணிக்கையிலான தொழில் முனைவோரைக் கொண்ட நகரங்களாக உள்ளன.