இந்தியாவின் முதல் பத்து மில்லியனர் மையங்களில் இரண்டாம் நிலை சார்ந்த ஏழு நகரங்கள் இடம் பெற்றுள்ளன என்று 2025 ஆம் ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் ஹுருன் இந்தியா அமைப்பின் செல்வ வள அறிக்கை கூறுகிறது.
அவை அகமதாபாத், சூரத், ஜெய்ப்பூர், வதோதரா, நாக்பூர், விசாகப்பட்டினம் மற்றும் லக்னோ ஆகியவை வேகமாக வளர்ந்து வரும் மில்லியனர் குடும்பங்களைக் கொண்டு உள்ளன.
முதல் பத்து மாநிலங்கள் இந்தியாவின் 79 சதவீதத்திற்கும் அதிகமான மில்லியனர் குடும்பங்களைக் கொண்டுள்ளன என்ற நிலையில் இது குறிப்பிட்ட பிராந்தியங்களில் செல்வக் குவிப்பை எடுத்துக்காட்டுகிறது.
மும்பை, புது டெல்லி மற்றும் பெங்களூரு ஆகியவை அதிக எண்ணிக்கையிலான மில்லியனர் குடும்பங்களைக் கொண்ட முதல் மூன்று நகரங்களாக முன்னிலை வகிக்கின்றன.
செல்வ வள மேலாண்மை புத்தொழில் நிறுவனங்கள், புதிய வாடிக்கையாளர்களில் சுமார் 30 சதவீதம் பேர் தற்போது முதல் 18 மாநிலத் தலைநகரங்களுக்கு வெளியே இருந்து வருவதாக தெரிவிக்கின்றன.
ஜெரோதா மற்றும் க்ரோவ் போன்ற டிஜிட்டல் பங்கு தரகு தளங்களின் 80 சதவீதத்திற்கும் அதிகமான புதிய பயனர்கள் பெருநகரங்கள் அல்லாத நகரங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.