2026 ஆம் ஆண்டிற்கான ஹுருன் உலகளாவிய யூனிகார்ன் குறியீட்டில் 61 யூனிகார்ன் புத்தொழில் நிறுவனங்களுடன் இந்தியா 4-வது இடத்தைத் தக்கவைத்துள்ளது.
இந்தக் குறியீடு, சமீபத்திய அறியப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், 1 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹8,300 கோடி) அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள தனியாருக்குச் சொந்தமான புத்தொழில் நிறுவனங்களை வரிசைப்படுத்துகிறது.
25 யூனிகார்ன்களுடன் பெங்களூரு இந்தியாவின் யூனிகார்ன் தலைநகரமாகத் தொடர்கிறது, அதைத் தொடர்ந்து மும்பை 13 யூனிகார்ன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்கா (806) முதலிடத்திலும், சீனா (381), இங்கிலாந்து (70) மற்றும் இந்தியா (61) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளதோடு, 222 யூனிகார்ன்களுடன் சான் பிரான்சிஸ்கோ உலகின் தலைசிறந்த யூனிகார்ன் நகரமாக உள்ளது.
ஆந்த்ரோபிக் நிறுவனம் உலகின் மிகவும் மதிப்புமிக்க யூனிகார்ன் ஆக மாறியுள்ள அதே வேளையில் ஜெரோதா ($9 பில்லியன்) இந்தியாவின் அதிக மதிப்புள்ள யூனிகார்ன் ஆகத் தொடர்கிறது; ஜெப்டோ (Zepto) மற்றும் ரேஸர்பே ($6 பில்லியன்) ஆகியன அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.