TNPSC Thervupettagam

ஹூபாரா கானமயில் பறவை பாதுகாப்பு முன்னெடுப்பு

August 1 , 2026 7 days 56 0
  • ஏரல் கடல் பகுதியில் பல்லுயிர் தன்மையை மீட்டெடுப்பதற்காக உஸ்பெகிஸ்தான், கராகல்பக்ஸ்தானில் 672 ஹூபாரா கானமயில்களை (கிளமிடோடிஸ் மேக்வீனி) விடுவித்தது.
  • ஹூபாரா கானமயில், IUCN செந்நிறப் பட்டியலின் கீழ் ‘எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அழிந்து வரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தக மாநாட்டின் (CITES) கீழ் பாதுகாக்கப்படுகிறது.
  • கஜகஸ்தானில் உள்ள ஒரு சிறப்பு மையத்தில் வளர்க்கப்பட்ட இப்பறவைகள், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகியவற்றின் கூட்டுப் பாதுகாப்பு முயற்சியின் கீழ் விடுவிக்கப்பட்டன.
  • சோவியத் காலத்து பருத்தி சாகுபடிக்காக அமு தர்யா நதியிலிருந்து தண்ணீர் திருப்பி விடப்பட்டதன் காரணமாக, ஏரல் கடல் அதன் 1960 களின் அளவிலிருந்து சுமார் 10% ஆகக் குறைந்துள்ளது.
  • இந்த பாதுகாப்புத் திட்டமானது வாழ்விடங்களை மீட்டெடுப்பதையும், வலசை போகும் உயிரினங்களைப் பாதுகாப்பதையும், மத்திய ஆசியாவில் சுற்றுச்சூழல் நிலைத் தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்