ஹென்லி கடவுச்சீட்டு தரவரிசையைப் பொறுத்தவரைத் தொடர்ந்து முதல் இடத்தில் ஜப்பான் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.
இரண்டாவது இடத்தில் தென்கொரியாவும் சிங்கப்பூரும் இணைந்துள்ளது.
இந்தியா 2018 ஆம் ஆண்டில் இருந்த 81-வது இடத்திலிருந்து இரண்டு இடம் முன்னேறி இந்த வருடம் 79வது இடத்தைப் பிடித்திருக்கின்றது.
அமெரிக்கா மற்றும் நார்வே உடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் நாடுகள் தரவரிசைகளில் முதல் மூன்று இடங்களையடுத்து இருக்கும் இடங்களைப் பிடித்து இருக்கின்றன.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றின் தரநிலைகள் தொடர்ந்து இறங்கு முகத்தில் இருக்கின்றன.
தரவரிசைகளின் கடைசி 5 நிலைகள் எரித்ரியா, ஏமன், பாகிஸ்தான், சோமாலியா, சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவற்றால் நிரப்பப்பட்டிருக்கின்றன.