2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாத ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இந்தியா 84 வது இடத்தைப் பிடித்து, அல்ஜீரியா மற்றும் மொரிட்டானியாவுடன் அந்த இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 57 ஆக இருந்த முன்கூட்டிய விசா இல்லாமல் பயணம் செய்யும் நாடுகளின் எண்ணிக்கை, தற்போது இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 55 நாடுகளுக்கு முன்கூட்டியே விசா பெறாமல் பயணம் செய்யலாம் என மாறியுள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளைப் பயன்படுத்தி 227 பயண இடங்களுக்கு 199 கடவுச்சீட்டுகளை இக்குறியீடு ஒப்பிடுகிறது.
முன் விசா இல்லாமல் 193 இடங்களுக்குச் செல்லும் அணுகலுடன் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்தது.
ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை தலா 188 இடங்களுக்கு அணுகலுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டன.