சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியா ஏழு இடங்கள் முன்னேறி 111 நாடுகளில் 83வது இடத்தைப் பிடித்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில், 116 நாடுகளில் இந்தியா 90வது இடத்தைப் பிடித்தது.
இந்தியப் பாஸ்போர்ட் ஆனது 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகளவில் 60 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலைக் கொண்டுள்ளது.
ஓமன் மற்றும் ஆர்மீனியா ஆகியவை இந்தியப்பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா பெறாமல் செல்லக் கூடிய இடங்களாக இந்தப் பட்டியலில் இறுதியாக சேர்க்கப்பட்டு உள்ளன.
பாஸ்போர்ட் மூலம் உலகளவில் விசா இல்லாமல் 192 இடங்களுக்குச் செல்லக் கூடிய வகையில் ஜப்பானும் சிங்கப்பூரும் இதில் கூட்டாக முதலிடத்தைத் தக்க வைத்துள்ளன.
ஆப்கானிஸ்தான் 26 இடங்களுக்கு மட்டுமே செல்லக் கூடிய பாஸ்போர்ட்டுடன் இறுதி இடத்தில் உள்ளது.
ஹென்லி என்பது லண்டனை மையமாகக் கொண்ட உலகளாவியக் குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமாகும்.