2026 ஆம் ஆண்டு ஹென்லே கடவுச் சீட்டுக் குறியீட்டில் இந்தியா 80வது இடத்தில் உள்ளது.
இந்தியக் கடவுச் சீட்டுக் வைத்திருப்பவர்கள் முன் நுழைவு இசைவு சீட்டு இல்லாமல் 55 நாடுகளுக்கு பயணிக்கலாம் (நுழைவு இசைவுச் சீட்டு இல்லாமல், வருகையின் போதான நுழைவு இசைவுச் சீட்டு அல்லது இணைய நுழைவு இசைவுச் சீட்டு).
இந்தியாவானது நைஜீரியா மற்றும் அல்ஜீரியாவுடன் சேர்ந்து இதில் 80வது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
இந்தக் குறியீடு சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் (IATA) தரவைப் பயன்படுத்தி பயணச் சுதந்திரத்தின் அடிப்படையில் கடவுச் சீட்டுகளை தரவரிசைப் படுத்துகிறது.
சிங்கப்பூர் 192 நாடுகளுக்கான பயண அணுகலுடன் ஒரு வலுவான கடவுச் சீட்டினைக் கொண்டுள்ளது அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் 24 நாடுகளுக்கான அணுகலுடன் பலவீனமான கடவுச் சீட்டினைக் கொண்டுள்ளது.