ஹென்லே கடவுச்சீட்டுக் குறியீடு 2021
October 10 , 2021
1366 days
535
- 2021 ஆம் ஆண்டு ஹென்லே கடவுச்சீட்டுக் குறியீட்டில் இந்தியாவின் நிலை கடந்த ஆண்டிலிருந்து 6 இடங்கள் பின்தங்கியுள்ளது.
- தற்போது இதில் இந்தியா 90வது இடத்தில் உள்ளது.
- இந்தக் குறியீடானது உலகில் பயணத்திற்கு மிகவும் ஏதுவான கடவுச்சீட்டுகளை பட்டியலிடுகிறது.
- இந்தக் குறியீட்டில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதலிடத்தில் உள்ளன.
- இக்குறியீடானது 227 சுற்றுலாத் தளங்கள் மற்றும் 199 கடவுச்சீட்டுகளை மதிப்பிடுகிறது.
- இந்தத் தரவரிசையானது சர்வதேச வான்வழிப் போக்குவரத்துக் கூட்டமைப்புத் தரவுகளின் கணக்கெடுப்பு அடிப்படையிலானதாகும்.
Post Views:
535