ஹெப்படைட்டிஸ் C நோய்க்கான மலிவுவிலை மருந்து –மலேசியா
July 31 , 2021 1485 days 677 0
ஹெப்படைட்டிஸ் C (கல்லீரல் அழற்சி) நோய்க்கான உலகின் முதலாவது மலிவு விலையிலான மற்றும் செயல்திறன் மிக்க ஒரு புதிய மருந்தினை மலேசிய நாடு பதிவு செய்துள்ளது.
ரவிதாஸ்விர் எனப் பெயரிடப்பட்ட இந்த மருந்தினை ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள சோஃபோஸ்புவிர் எனப்படும் ஒரு மருந்துடன் சேர்த்துப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.
ஹெப்படைட்டிஸ் C வகை நோய்க்கு இதுவரையில் தடுப்பூசி கண்டறியப்படவில்லை.
உலக சுகாதார அமைப்பானது 2030 ஆம் ஆண்டிற்குள் இந்நோயின் புதிய தொற்றுக்களை 90 சதவீதமாகவும் இந்நோயால் ஏற்படும் உயிரிழப்புகளை 65 சதவீதமாகவும் குறைத்து இந்நோயை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டமிட்டுள்ளது.