உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘ஹெலினா’ எனப்படும் ஒரு ஹெலிகாப்டரிலிருந்து ஏவப்படக் கூடிய ஒரு பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையானது சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றின் அறிவியலாளர்கள் குழு ஒன்றினால் இந்தச் சோதனையானது நடத்தப்பட்டது.
ஹெலினா அதிகபட்சமாக ஏழு கிலோமீட்டர் தொலைவு வரையிலான வரம்புடையது.