ஒரு புதிய ஆராய்ச்சியானது புவியின் முதன்மையான கண்ட மேலோடு 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாகக் கூறுகிறது.
ஹேடியன் புரோட்டோக்ரஸ்ட் (தோற்றுரு மேலோடு) என்பது புவியின் வெளிப்புற அடுக்கு முதலில் உருவான போது வழங்கப்பட்ட புவி மேலோட்டின் பெயர் ஆகும்.
'ஹேடியன்' முன்னொட்டு ஆனது புவியின் முதல் புவியியல் யுகத்தினை (aeon) குறிக்கிறது.
இந்த காலக் கட்டத்தில், அதன் தோற்றத்திலிருந்து 200 மில்லியன் ஆண்டுகளுக்குள், பூமியின் மேற்பரப்பு ஓரளவு உருகியிருந்ததுடன் இதன் மீது விண்வெளியில் பயணித்த பாறைகளும் தொடர்ந்து மோதின.
இதில் பல எரிமலைகளும் வெகுவாகச் சீற்றமடைந்ததால், மேற்பரப்பு ஆனது மிகவும் வெப்பமானதாகவும் பரந்து விரிந்தும் இருந்தது.
பாறைக் குழம்பு (மாக்மா) அடுக்கின் சில பகுதிகள் குளிர்ந்ததால், கண்ட மேலோட்டின் முதல் துண்டுகள் வடிவம் பெறத் தொடங்கின.
இருப்பினும், புதிய பகுதிகள் திடப்படுத்தப்படும் போது சில பகுதிகள் உடைந்ததால், அது நிலையற்றதாகவே இருந்தது.
கண்ட மேலோட்டின் தடிமனானப் பகுதிகள் மிகவும் மெதுவாக முதல் கண்டங்களை உருவாக்கின என்பதோடு அவையே ஆஸ்தெனோஸ்பெரிக் எனும் மென் பாறைக் கோள மூடகத்தில் தட்டுகளைப் போல நகர்ந்தன.