ஹைட்ரஜன் எரிபொருள் கலன் மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் பேருந்து
August 24 , 2022 1090 days 731 0
புனேவில் உள்ள KPIT-CSIR நிறுவனத்தினால் ஹைட்ரஜன் எரிபொருள் கலன் மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் பேருந்து உருவாக்கப்பட்டது.
ஹைட்ரஜன் எரிபொருள் கலன் ஆனது ஹைட்ரஜன் மற்றும் காற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்குகிறது.
மேலும் இந்தச் செயல்பாட்டின் போது வெப்பம் மற்றும் தண்ணீரை மட்டுமே அது உற்பத்தி செய்கிறது.
இந்தப் பேருந்தில் உள்ள ஹைட்ரஜன் எரிபொருள் கலன்கள் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்களை இணைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
இந்த இரண்டு வாயுக்களும் மின்சாரம், நீர் மற்றும் சிறிய அளவு வெப்பத்தை உருவாக்குவதற்காக வழக்கமான மின்கல அடுக்குகள் போன்ற மின் வேதியியல் கலத்தின் உள்ளே வினை புரிகின்றன.
இந்த மின்சாரம் அந்த வாகனத்தை முன்னோக்கிச் செலுத்துவதற்கு உதவுவதற்காக வேண்டி மின்சார இயக்கிகளால் பயன்படுத்தப்படுகிறது.