ஒஹ்மியம் நிறுவனமானது இந்தியாவின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் மின்பகுப்பு பல்முனைத் தொழிற்சாலையைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒஹ்மியம் இன்டர்நேஷனல் என்ற ஒரு நிறுவனமானது கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் இந்தியாவின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் மின்பகுளிகளை (Electrolytes) தயாரிக்கும் அலகினைத் தொடங்கியுள்ளது.
இத்தொழிற்சாலையானது இந்தியாவில் உருவாக்கப்பட்ட புரோட்டான் பரிமாற்றச் சவ்வுடன் (Proton Exchange Membrane) கூடிய ஹைட்ரஜன் மின்பகுளிகளைத் தயாரிக்கும்.
ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றைப் பிரிப்பதற்கு வேண்டி புதுப்பிக்கத் தக்க ஆற்றல் வளங்களிலிருந்துப் பெறப்பட்ட ஆற்றலை அது பயன்படுத்துகிறது.
பசுமை ஹைட்ரஜன் என்பது புதைபடிமங்களிலிருந்து பெறப்படும் நீல ஹைட்ரஜனுக்கு மாற்றாக புதைபடிமம் அல்லாத ஆற்றல்களிலிருந்து பெறப் படுவதாகும்.