TNPSC Thervupettagam

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (HCQ) உற்பத்தி

April 25 , 2020 1925 days 828 0
  • HCQ-ன் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது.
  • இந்த மருந்தை உற்பத்தி செய்வதில் இப்கா ஆய்வகம், சைடுஸ் கேடிலா மற்றும் வாலேஸ் மருந்து நிறுவனம் ஆகியவை இந்தியாவில் முன்னிலையில் உள்ளன.
  • இப்கா நிறுவனமானது உலக அளவில் இந்த மருந்தை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ளது. 
  • இந்த மருந்தை உற்பத்தி செய்வதற்கு இந்தியாவிற்குத் தேவைப்படும் செயல்படும் திறன் கொண்ட மருந்து மூலப்பொருட்களில் மொத்தத்தில் 70 சதவீதம் சீனாவிடமிருந்து வருகின்றன.
  • உலகின் 70% HCQ விநியோகத்தை இந்தியா உற்பத்தி செய்கின்றது. 
  • இந்த மருந்தின் மிகப்பெரிய  ஏற்றுமதியாளர் நாடு இந்தியா ஆகும்.
  • மலேரியா, தோல் அழிநோய் மற்றும் சளி கீழ்வாதம் ஆகிய 3 நோய்களுக்காக இந்தியாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் 24 மில்லியன்  என்ற அளவில் HCQ மருந்துகள் தேவைப்படுகின்றன.
  • தற்பொழுது, கொரானா வைரஸ் பாதித்துள்ள 55 நாடுகளுக்கு இந்த மருந்தினை விநியோகிக்கும்  நடைமுறையில் இந்தியா இறங்கியுள்ளது.
  • இந்த மலேரியத் தடுப்பு மருந்தானது அமெரிக்க அதிபரினால் கோவிட் – 19 நோய்க்கு எதிராகப் போராடும் முறையில் ஒரு முக்கியத் தீர்வாக  இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
  • இந்த மருந்தானது மலேரியா இல்லாத காரணத்தினால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தயாரிக்கப் படுவதில்லை.
  • பிரேசிலின் பிரதமரான ஜெய்ர் போல்ஸ்னரோ இந்தியாவிடமிருந்து HCQன் விநியோகத்தை இராமாயணத்தில் அனுமன் கொண்டு வரும் “புனித மருந்து” அல்லது “சஞ்சீவினி” போன்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
  • இந்த ஆண்டின் 70வது குடியரசுத் தினத்தின் தலைமை விருந்தினர் போல்ஸ்னரோ ஆவார். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்