ஹைப்பர்லூப் இரயிலுக்கான இந்தியாவின் முதல் சோதனை பாதை
March 1 , 2025 193 days 252 0
இரயில்வே அமைச்சகத்தின் ஒரு ஆதரவுடன் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, சுமார் 422 மீட்டர் நீளமுள்ள, இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை பாதையை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம், 350 கி.மீ தூரத்தினை வெறும் 30 நிமிடங்களில் கடக்க முடியும்.
இது 'ஐந்தாம் போக்குவரத்து முறைமை' என்று குறிப்பிடப்படுகிறது.
ஹைப்பர்லூப் என்பது நீண்ட தூரப் பயணத்திற்கான மிக அதிவேகப் போக்குவரத்து அமைப்பாகும்.
இது வெற்றிடக் குழாய்களில் உள்ள பிரத்யேக நீள் பெட்டகங்கள் வழியாக இரயில்கள் மிக அதி வேகத்தில் பயணிக்க அனுமதிக்கிறது.
ஒரு வெற்றிடக் குழாயினுள் மின்காந்த விளைவு காரணமாக அப்பெட்டகங்கள் மிதந்து நகர்வதால் அங்கு உராய்வு நீக்கப்படுகிறது.
இது அதன் வழி செல்லும் அப்பெட்டகங்கள் மணிக்கு 1,000 கி.மீ வேகத்தினை எட்ட வழி வகுக்கிறது.
ஒரு மாக் என்பது வழக்கமான பயண நாளில், கடல் மட்டத்தில் உள்ள கட்டமைப்பில் மணிக்கு 761 மைல்கள் பயணிக்கும் வேகத்தினைக் குறிக்கிறது.