TNPSC Thervupettagam

ஹொய்சாலர் காலத்து நடுகல் கண்டுபிடிப்பு

August 11 , 2026 2 days 47 0
  • கர்நாடகாவின் நீரகுண்டாவில் கன்னட கல்வெட்டுடன் கூடிய பல நூற்றாண்டுகள் பழமையான ஹொய்சாலர் ஆட்சியாளர் விஷ்ணுவர்த்தனனின் மரணம் குறித்த தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ள வீரகல்லு (நடுகல்) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • பங்காபுராவில் விஷ்ணு வர்த்தனன் இறந்த சிறிது நேரத்திலேயே போப்பா என்ற போர்வீரன் இறந்ததாகவும், அவரது நினைவாக அவரது மனைவி மரவ்வே என்பவரால் இக்கல்வெட்டு உருவாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இக்கல்வெட்டின் காலம் துன்மதி ஆண்டு, புஷ்ய மாதத்தின் ஏகாதசி, அதாவது 1064 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இது 1141 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதியைக் குறிக்கிறது.
  • விஷ்ணுவர்த்தனன் பங்காபுராவில் இறந்ததாக நம்பப்படுகிறது, ஆனால் அவரது மரணம் நிகழ்ந்த ஆண்டு 1149 முதல் 1152 வரை இருந்திருக்கலாம் என வரலாற்றாசிரியர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
  • கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள நீரகுண்டா கிராமத்தில் உள்ள லட்சுமி நாராயண சுவாமி கோயிலில் இந்த வீரகல்லு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்