ஹோமோஃபோபியா, பைபோபியா மற்றும் டிரான்ஸ்ஃபோபியா ஆகியவற்றுக்கு எதிரான சர்வதேச தினம் – மே 17
May 20 , 2023 864 days 387 0
இது LGBT உரிமை மீறல்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் சர்வதேச நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதையும், உலகளவில் LGBT உரிமைகள் சார்ந்த பணிகளில் ஆர்வத்தைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
1990 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின் (WHO) சர்வதேச நோய்கள் வகைப் பாடுகளில் இருந்து ஓரினச் சேர்க்கையை நீக்குவதற்கான ஒரு முடிவை நினைவு கூரும் வகையில் இந்த தேதியானது தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த நாளானது, 2004 ஆம் ஆண்டில் ஒரு கருத்தாக்கமாக உருவாக்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதியன்று ஓர் பாலின ஈர்ப்புடையவர்கள் மீதான வெறுப்பு காட்டுதலுக்கு எதிரான முதல் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டதிலிருந்து ஓர் ஆண்டு காலப் பிரச்சாரம் உருவானது.