ஹோமோஃபோபியா, பைபோபியா மற்றும் டிரான்ஸ்ஃபோபியாவுக்கு எதிரான சர்வதேச தினம் - மே 17
May 19 , 2024 362 days 217 0
இந்தத் தினமானது பாலியல் மற்றும் பாலினப் பன்முகத்தன்மையின் மீதானப் பெரும் கொண்டாட்டத்தினைக் குறிக்கிறது.
ஓரினச்சேர்க்கை அல்லது ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான பகுத்தறிவற்ற பயம், வெறுப்பு அல்லது பாகுபாடு ஆகியவை ஓரினச் சேர்க்கையாளர்கள் மீதான வெறுப்பு என்று பொருளாகும்.
பைபோபியா என்பது இருபால் அல்லது இருபாலினராக அடையாளம் காணப்பட்ட அல்லது உணரப்பட்ட நபர்களின் மீதான வெறுப்பினைக் குறிக்கிறது.
அடிப்படையில் டிரான்ஸ்ஃபோபியா என்பது, திருநர்கள் மீதான பயம் அல்லது வெறுப்பின் வெளிப்பாட்டைக் குறிக்கிறது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கொண்டாட்டத்தின் கருத்துரு: "No one left behind: equality, freedom, and justice for all" என்பதாகும்.