இந்திய இணையம் மற்றும் கைபேசி சங்கத்துடன் (IAMAI) இணைந்து, "Rethinking Homestays: Navigating Policy Pathways" என்ற தலைப்பில் நிதி ஆயோக் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
இந்தியாவின் சுற்றுலாத் துறையில் ஹோம்ஸ்டேகள் மற்றும் படுக்கை வசதி மற்றும் காலை உணவு வழங்கலின் (BnBs) திறனை வெளிக் கொணர்வதற்கான ஓர் உத்திசார் செயல் திட்டத்தினை இந்த அறிக்கை வழங்குகிறது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, பாரம்பரியத்தின் பாதுகாப்பு மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கான மிதமான, வெளிப்படையான விதிமுறைகளை இது வலியுறுத்துகிறது.