2019 ஆம் ஆண்டின் உலகளாவிய கோ டு திங்க் டேங்க் குறியீட்டு அறிக்கை
February 5 , 2020 2143 days 882 0
2019 ஆம் ஆண்டின் உலகளாவிய கோ டு திங்க் டேங்க் குறியீட்டு அறிக்கை (Global Go to Think Tank Index Report - GGTTI) என்பது உலகில் உள்ள கொள்கை உருவாக்கக் குழுக்களின் ஒரு முழுமையான தரவரிசை அறிக்கையாகும்.
இது 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்தக் குறியீடானது உலகெங்கிலும் உள்ள சிறந்த கொள்கை உருவாக்கக் குழுக்களை தரவரிசைப் படுத்துகின்றது.
இந்த அறிக்கையின் படி, 176 உலகளாவிய கொள்கை உருவாக்கும் குழுக்களில் இந்தியாவைச் சேர்ந்த அப்சர்வர் ஆராய்ச்சி அமைப்பானது 27வது இடத்தில் உள்ளது.
இந்த அறிக்கையில் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச அமைதிக்கான கார்னகி அமைப்பானது முதலிடத்தைப் பிடித்துள்ளது.
509 கொள்கை உருவாக்கும் குழுக்களுடன் இந்தியா இரண்டாவது நாடாக அதிக எண்ணிக்கையிலான கொள்கை உருவாக்கும் குழுக்களைக் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான கொள்கை உருவாக்கும் குழுக்கள், அதாவது 1,871 கொள்கை உருவாக்கும் குழுக்கள் உள்ளன.