கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம்
November 14 , 2019 2265 days 826 0
கர்நாடகாவில் 17 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆனால் அம்மாநிலத்தில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தல்களில் அவர்கள் போட்டியிட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வானது, 2023 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினர்களின் முழுப் பதவிக் காலத்திற்கும் அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளது.
சபாநாயகர், இந்த சட்டமன்ற உறுப்பினர்களை 16வது கர்நாடக சட்டப் பேரவையில் இருந்து இந்த ஆண்டு ஜூலை 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணை அல்லது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்தார்.
மேலும், தற்போதைய சட்டமன்றத்தின் ஆட்சிக் காலத்தின் போது அவர்கள் தேர்தலில் போட்டியிடவும் சபாநாயகரால் தடை விதிக்கப்பட்டிருந்தது.