பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட நீர் மறுபயன்பாட்டுக் கொள்கை 2026
April 6 , 2026 71 days 172 0
கழிவுநீரை பெரிய அளவில் மறுபயன்பாட்டிற்கு கொண்டு வருவதை ஊக்குவிப்பதற்காக, உத்தரப்பிரதேச அமைச்சரவை 'பாதுகாப்பான சுத்திகரிக்கப் பட்ட நீர் மறுபயன்பாட்டுக் கொள்கை 2026'-க்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (CSE) ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இக்கொள்கை, நீர் மேலாண்மையில் ஒரு சுழற்சிப் பொருளாதாரத்தை நோக்கி நகர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2030-ஆம் ஆண்டிற்குள் 50% மறுபயன்பாடு; கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STPs) அமைந்துள்ள இடங்களில் பிந்தைய கட்டங்களில் 100% மறுபயன்பாடு மற்றும் செயல் பாட்டில் இல்லாத பகுதிகளில் 2045-ஆம் ஆண்டு வரையிலான படிப்படியான இலக்குகள் ஆகிய கட்ட வாரியான இலக்குகளை இது நிர்ணயிக்கிறது.
நன்னீர் பயன்பாட்டையும் நிலத்தடி நீர் எடுப்பையும் குறைக்க உதவும் வகையில் சுத்திகரிக்கப் பட்ட நீர் விவசாயம், தொழில், கட்டுமானம் மற்றும் நகர்ப்புற நிலப்பரப்பு மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும்.
இதற்காக 'நகர அளவிலான மறுபயன்பாட்டு செயல் திட்டங்கள்' (CLRAPs) தயாரிக்கப் படுகின்றன; ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜில் முறையே ₹93 கோடி மற்றும் ₹1,625 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.