TNPSC Thervupettagam
November 27 , 2019 1992 days 658 0
  • மிலன் பயிற்சிக்கான மத்திய திட்டமிடல் மாநாடானது விசாகப்பட்டினத்தில் (HQENC) நிறைவு பெற்றது.
  • மிலன் - 2020 என்ற பயிற்சியானது  2020  ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விசாகப் பட்டினத்தில் நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.
  • இந்த மிகப்பெரிய பயிற்சியில் 41 நாடுகளைச் சேர்ந்த கடற்படைகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • இது 1995 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப் படும் ஒரு பன்னாட்டு கடற்படைப் பயிற்சித் தொடராகும்.
  • இது நட்புறவுடன் உள்ள வெளிநாட்டுக் கடற்படைகளுக்கு இடையிலான தொழில்முறை தொடர்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது கடந்த ஆண்டு வரை அந்தமான் நிக்கோபார் கட்டுப்பாட்டகத்தில் நடத்தப்பட்டது.
  • இந்தப் பயிற்சியானது தற்பொழுது முதன்முறையாக கிழக்கு கடற்படைக் கட்டுப்பாட்டகத்தில் நடத்தப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்