வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் குப்த வம்சப் பேரரசரான ஸ்கந்தகுப்தாவின் பங்கு குறித்து இரண்டு நாள் நடைபெறும் சர்வதேசக் கருத்தரங்கை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
ஸ்கந்தகுப்தர் என்பவர் குப்தப் பேரரசரான முதலாம் குமார குப்தாவின் மகன் ஆவார்.
இவர் கி.பி 455 ஆம் ஆண்டில் அரியணையில் ஏறி கி.பி 467 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.
இவர் புஷ்யமித்திரர்களைத் தோற்கடித்து விக்ரமாதித்யா என்ற பட்டத்தைத் தானே சூட்டிக் கொண்டார்.
இவரது 12 ஆண்டு கால ஆட்சியின் போது, இவர் இந்தியாவின் மாபெரும் கலாச்சாரத்தைப் பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல், நாட்டை அயல்நாட்டு ஆக்கிரமிப்பிலிருந்தும் பாதுகாத்து, வடமேற்கில் இருந்து இந்தியா மீது படையெடுத்த ஹூணர்களையும் தோற்கடித்தார்.
இவர் பொதுவாக மாபெரும் குப்தப் பேரரசை ஆண்ட அரசர்களில் கடைசி அரசராகக் கருதப் படுகின்றார்.