TNPSC Thervupettagam

​​​​2020 ஆம் ஆண்டின் பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி

February 13 , 2020 1968 days 629 0
  • இரண்டாவது பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி – 2020 ஆனது  ஒடிசாவின் புவனேஸ்வரில் தொடங்கப் பட்டுள்ளது.
  • தேசிய பேரிடர் மீட்புப் படையானது (National Disaster Response Force - NDRF) இந்திய அரசின் சார்பாக பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி - 2020ஐ ஏற்பாடு செய்து வருகின்றது.
  • இந்தப் பயிற்சியானது பேரிடர்களினால் சேதமடைந்த பாரம்பரியத் தளங்களை மீட்டெடுப்பதற்கும் வழிவகை செய்கின்றது.
  • "பூகம்பம் மற்றும் வெள்ளம் அல்லது புயலினால் கடுமையான சேதத்தைச் சந்திக்கும் ஒரு கலாச்சாரப் பாரம்பரியத் தளம்" என்ற கருப்பொருளின் கீழ் இந்தப் பயிற்சியானது நடைபெறுகின்றது.
  • இந்தியா, மியான்மர், வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.
  • இந்த ஆண்டுப் பயிற்சியில் தாய்லாந்து மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் பங்கேற்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்