உலக நீடித்த (வளம் குன்றா) வளர்ச்சி உச்சி மாநாடு
January 31 , 2020 1919 days 838 0
உலக நீடித்த (வளம் குன்றா) வளர்ச்சி உச்சி மாநாடானது (WSDS - World Sustainable Development Summit) புது தில்லியில் உள்ள வாழ்விட மையத்தில் தொடங்கப் பட்டுள்ளது.
இந்த உச்சி மாநாடானது இதற்கு முன்பு தில்லி நீடித்த (வளம் குன்றா) வளர்ச்சி உச்சி மாநாடு என்று அழைக்கப்பட்டது.
WSDS என்பது எரிசக்தி மற்றும் வள நிறுவனத்தினால் (TERI - The Energy and Resources Institute) ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
இது 2001 ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிகழ்வின் கருப்பொருள்: ‘2030 ஆம் ஆண்டை நோக்கி: அடுத்த பத்தாண்டை நோக்கிய பயணத்தை உருவாக்குதல்’ என்பதாகும்.