தேசிய அரசியலமைப்பு தினம் அல்லது சட்ட தினம் - நவம்பர் 26
November 27 , 2019 2092 days 1065 0
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதியன்று இந்திய அரசியலமைப்பு தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
மேலும் இது சம்விதான் திவாஸ் அல்லது தேசிய சட்ட தினம் அல்லது தேசிய அரசியலமைப்பு தினம் என்றும் அழைக்கப் படுகின்றது.
இந்தத் தினமானது 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பானது முறையாக ஏற்றுக் கொள்ளப் பட்டதைக் குறிக்கின்றது.
அரசியலமைப்பின் வரைவானது டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் தயாரிக்கப் பட்டது.
டாக்டர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவதோடு, அரசியலமைப்பின் முக்கியத்துவம் மற்றும் அரசியலமைப்பின் விழுமியங்கள் ஆகியவை குறித்து குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தத் தினம் அனுசரிக்கப் படுகிறது.
அம்பேத்கரின் 125வது பிறந்த தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 2015 ஆம் ஆண்டு முதல் இத்தினம் இது போன்று அனுசரிக்கப் பட்டு வருகின்றது.