இந்தியா மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பும் (FAO) புதிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் Blue Ports/கடல்சார் துறைமுக உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
கடல்சார் துறைமுகங்கள் ஏற்றுமதியை அதிகரிப்பது, மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பது மற்றும் துறைமுக நடவடிக்கைகளின் சுற்றுச்சூழல் பாதிப்புத் தடத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
நிலையான மற்றும் திறன் மிக்க மீன்பிடித் துறைமுகங்களை மையமாகக் கொண்ட திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கத் தொடரில் முதல் தொடரினை மீன்வளத் துறை நடத்தியது.
இந்த முன்னெடுப்பில் வனக்பரா (டையு), ஜகாவ் (குஜராத்) மற்றும் காரைக்கால் (புதுச்சேரி) ஆகிய இடங்களில் மூன்று சோதனை துறைமுகங்கள் உள்ளன.
துறைமுக செயல்திறன் மற்றும் நிலைத் தன்மையை மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு, 5G, IoT (இணைய உலகம்) மற்றும் தானியக்கம் போன்ற திறன் மிக்க தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.