ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக அமைப்பானது ஒரு புதிய சட்டத்தை இயற்றி உள்ளது.
உலக வெப்பமயமாதலை உருவாக்கும் வாயுக்களின் உமிழ்வை 55% வரை குறைத்தல் எனும் தனது உறுதிப்பாட்டினை நிறைவேற்றும் வகையில் இந்தச் சட்டம் ஆனது இயற்றப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘Fit for 55’ எனும் இந்தச் சட்டத்தில் வெளிநாட்டு நிறுவனங்களால் ஏற்படுத்தப்படும் மாசுபாட்டிற்கு வரி விதிக்கும் சர்ச்சைக்குரிய ஒரு திட்டமும் அடங்கும்.
மேலும் 2035 ஆண்டிற்குள் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களைப் பயன்பாட்டு வழக்கத்திலிருந்து வெளியேற்றுவதையும் இந்தச் சட்டம் முன்மொழிகிறது.