TNPSC Thervupettagam
May 31 , 2025 384 days 479 0
  • Ideas4LiFE’ முன்னெடுப்பின் கீழ் வெற்றி பெற்ற 21 கருத்தாக்கங்களைச் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) அறிவித்துள்ளது.
  • Ideas4LiFE’ என்ற முன்னெடுப்பானது ‘UNICEF YuWaah’ உடன் இணைந்து ஒரு பிரத்தியேக வலைதளம் மூலம் ‘Ideas4LiFE’ முன்னெடுப்பு தொடங்கப்பட்டது.
  • LiFE திட்டம் (ஆற்றலைச் சேமித்தல், தண்ணீரைச் சேமித்தல், நெகிழிப் பொருட்களின் ஒற்றைப் பயன்பாட்டினைத் தவிர்த்தல், மிக நிலையான உணவு முறைகளை ஏற்றல், கழிவுகளைக் குறைத்தல், மின்னணுக் கழிவுகளைக் குறைத்தல், நல் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஏற்றல்) ஆகியவற்றின் ஏழு கருப் பொருள்களில் ஏதேனும் ஒன்றில் கருத்தாக்கங்கள் வரவேற்கப்பட்டன.
  • 'ஆற்றலைச் சேமித்தல்' என்ற ஒரு கருப்பொருளின் கீழ் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மூன்றாவது பரிசை வென்றது.
  • கோயம்புத்தூரில் உள்ள PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது 'நெகிழிப் பொருட்களின் ஒற்றைப் பயன்பாட்டினைத் தவிர்த்தல்' என்ற ஒரு கருப்பொருளின் கீழ் முதல் பரிசையும், 'நிலையான உணவு முறைகளை ஏற்றல்' என்ற கருப்பொருளின் கீழ் 2வது பரிசையும் வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்