துபாய் அரசானது, ‘One Freezone Passport’ எனும் ஒருங்கிணைந்தப் பொருளாதார மண்டலத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய திட்டமானது, ஒரு பொருளாதார மண்டலத்தில் உரிமம் பெற்ற நிறுவனங்கள் கூடுதல் உரிமம் பெறாமலேயே அமீரகம் முழுவதும் உள்ள பிற மண்டலங்களுக்கு அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்த அனுமதிக்கிறது.
உலகளவில் புகழ்பெற்ற சொகுசு நிறுவனமான லூயிஸ் உய்ட்டன், இந்தத் திட்டத்தின் கீழ் இணைந்த முதல் நிறுவன உறுப்பினராக மாறியுள்ளது.
துபாயில் எண்ணெய் அல்லாத வர்த்தகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்ற, மேலும் 100 சதவீத வெளிநாட்டு உரிமை மற்றும் வரி விலக்குகளை வழங்குகின்ற 20க்கும் மேற்பட்ட பொருளாதார மண்டலங்கள் உள்ளன.