‘அனைவருக்குமான பார்வைத் திறன்’ - ஐக்கிய நாடுகள் அவை
July 28 , 2021 1478 days 635 0
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ‘Vision for everyone’ (அனைவருக்குமான பார்வைத் திறன்) எனப்படும் பார்வைத்திறன் தொடர்பான புதிய மற்றும் முதலாவது தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 1.1 பில்லியன் அளவிலான பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு, குறிப்பாக கண் மருத்துவ நலச் சேவைகளைப் பெற இயலாதவர்களுக்கு கண் மருத்துவச் சேவைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
‘அனைவருக்குமான பார்வைத் திறன் : நிலையான மேம்பாட்டு இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல்’ எனும் ஒரு தீர்மானமானது, வங்காளதேசத்தின் ஐ.நா. தூதர் ரபாப் ஃபாதிமா (Rabab Fatima) என்பவரால் அறிமுகப் படுத்தப் பட்டு, ஐ.நா. பொதுச் சபையில் வங்காளதேசம், ஐயர்லாந்து, ஆன்டிகுவா மற்றும் பர்புடா ஆகிய நாடுகளால் முன்மொழியப்பட்டது.