TNPSC Thervupettagam

‘அறுசுவை உணவியல் நகரம்’ - லக்னோ

November 4 , 2025 17 days 130 0
  • உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு, உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்டில் யுனெஸ்கோ பொது மாநாட்டின் 43வது அமர்வு நடைபெற்றது.
  • இந்த நிகழ்வில் யுனெஸ்கோ அமைப்பானது லக்னோவை 'ஆக்கப்பூர்வமான அறுசுவை உணவியல் நகரம்' என்று அறிவித்தது.
  • இந்த உலக அங்கீகாரம் ஆனது அந்த நகரத்தின் நூற்றாண்டு காலப் பழமையான ஆவாதி உணவு வகைகள், உயிர்ப்புமிக்க உணவு மரபுகள் மற்றும் உள்ளார்ந்த கலாச்சாரப் பாரம்பரியத்தை கொண்டாடுகிறது.
  • இந்த அங்கீகாரம் கலாச்சாரம் மற்றும் உணவு வகைகள் மூலம் அதன் கலாச்சார மற்றும் பொருளாதார (soft power) ஆற்றலை வெளிப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளுடன் ஒன்றி, நிலையான சுற்றுலாவை ஊக்குவிக்கும், பாரம்பரிய சமையல் குறிப்புகளைப் பாதுகாக்கும் என்பதோடு மேலும் உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் சமையல் வல்லுநர்களையும் ஆதரிக்கும்.
  • 2025 ஆம் ஆண்டில் லக்னோ சேர்க்கப்பட்டதன் மூலம், இந்த வலையமைப்பில் உள்ள இந்திய நகரங்களின் எண்ணிக்கை மொத்தம் ஒன்பது ஆக உயர்கிறது.
  • ஐதராபாத், அல்-மதினா அல்-முனாவ்வரா (சவுதி அரேபியா), கெலோவ்னா (கனடா), குவான்சோ (சீனா) மற்றும் ஜராகோசா (ஸ்பெயின்) போன்றவற்றுடன் இணைந்து, உலகளவில் உள்ள 70 அறுசுவை உணவியலில் படைப்பாற்றல் மிக்க நகரங்களில் ஒன்றாக லக்னோ இடம் பிடித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்