இந்திய இரயில்வே நிர்வாகமானது, புதிதாக தொடங்கப்பட்ட Aabhar/ஆபார் இயங் கலை வழி பண்டக சாலைக்கு ஆதரவளிக்க உள்ளது.
இது பழங்குடியினர், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களால் தயாரிக்கப் பட்ட பரிசுப் பொருட்களை காட்சிப்படுத்துகிறது.
இந்த பண்டக சாலைகள் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ODOP) மற்றும் புவி சார் குறியீடு (GI) திட்டங்களின் கீழ் தயாரிப்புகளை ஊக்குவிக்கிறது.
அரசு இணைய சந்தையில் (GeM) நடத்தப்படுகின்ற ஆபார் ஆனது, மத்தியக் குடிசை தொழில்களின் பேரங்காடி (CCIE), காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் (KVIC) மற்றும் பிற மாநில மற்றும் மத்திய கைவினைப் பொருட்கள் பேரங்காடிகளிலிருந்து பொருட்களைப் பெறுகிறது.
இரயில்வே நிர்வாகம் முன்னதாக உள்ளூர் கைவினைப்பொருட்கள், கைத்தறி மற்றும் உள்நாட்டு தயாரிப்புகளை அதன் வலையமைப்பு முழுவதும் காட்சிப்படுத்த ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு (OSOP) திட்டத்தை அறிமுகப்படுத்தியது.