TNPSC Thervupettagam

‘இந்திய மாநிலங்களில் மனநல கோளாறுகள் குறித்த சுமை: உலகளாவிய நோய்களின் சுமை குறித்த ஆய்வு 1990-2017’

December 26 , 2019 2017 days 607 0
  • இந்த ஆய்வானது இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் (Indian Council of Medical Research - ICMR) மற்றும் இந்தியப் பொதுச் சுகாதார அமைப்பு (Public Health Foundation of India - PHFI) ஆகியவற்றால் நடத்தப்பட்டது.
  • பல்வேறு வகையான மனநலக் கோளாறுகள் இந்தியாவில் அதிக எண்ணிகையிலான மக்களை, குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்களை மிகவும் மோசமாக பாதிக்கின்றன.
  • உயர் சமூக - மக்கள்தொகை குறியீட்டின் (Socio - demographic index - SDI) மாநிலக் குழுவில் தமிழ்நாடு, கேரளா, கோவா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மனச் சோர்வுக் கோளாறுகள் அதிக அளவில் பரவிக் காணப் படுகின்றன. இதில் ஆந்திரப் பிரதேச மாநிலம் நடுத்தர மாநிலக் குழுவில் உள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் ஏழு இந்தியர்களில் ஒருவர் மாறுபட்ட தீவிரத் தன்மை கொண்ட மனநலக் கோளாறுகளால் பாதிக்கப் பட்டுள்ளார்.
  • தென் மாநிலங்களில் மனச்சோர்வு, கவலை மற்றும் பதற்றம் தொடர்பான கோளாறுகள் அதிகமாக இருப்பது, இந்த மாநிலங்களில் நவீனமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கலின் உயர்நிலை விகிதங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்