‘இந்திய மாநிலங்களில் மனநல கோளாறுகள் குறித்த சுமை: உலகளாவிய நோய்களின் சுமை குறித்த ஆய்வு 1990-2017’
December 26 , 2019 2061 days 647 0
இந்த ஆய்வானது இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் (Indian Council of Medical Research - ICMR) மற்றும் இந்தியப் பொதுச் சுகாதார அமைப்பு (Public Health Foundation of India - PHFI) ஆகியவற்றால் நடத்தப்பட்டது.
பல்வேறு வகையான மனநலக் கோளாறுகள் இந்தியாவில் அதிக எண்ணிகையிலான மக்களை, குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்களை மிகவும் மோசமாக பாதிக்கின்றன.
உயர் சமூக - மக்கள்தொகை குறியீட்டின் (Socio - demographic index - SDI) மாநிலக் குழுவில் தமிழ்நாடு, கேரளா, கோவா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மனச் சோர்வுக் கோளாறுகள் அதிக அளவில் பரவிக் காணப் படுகின்றன. இதில் ஆந்திரப் பிரதேச மாநிலம் நடுத்தர மாநிலக் குழுவில் உள்ளது.
2017 ஆம் ஆண்டில் ஏழு இந்தியர்களில் ஒருவர் மாறுபட்ட தீவிரத் தன்மை கொண்ட மனநலக் கோளாறுகளால் பாதிக்கப் பட்டுள்ளார்.
தென் மாநிலங்களில் மனச்சோர்வு, கவலை மற்றும் பதற்றம் தொடர்பான கோளாறுகள் அதிகமாக இருப்பது, இந்த மாநிலங்களில் நவீனமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கலின் உயர்நிலை விகிதங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.