‘இந்தியாவின் ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்’ குறித்த அறிக்கை
August 11 , 2024 424 days 340 0
2024 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 219.1 மெகாவாட் திறன் கொண்ட ஒட்டு மொத்த நிறுவப்பட்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) திறன்கள் உள்ளன.
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிறுவப்பட்ட ஆற்றல் சேமிப்பு அமைப்புகளின் திறன் மொத்தம் 120 MWh (40 MW) ஆகும்.
சூரிய ஒளி மின்னழுத்த (PV) அமைப்புகள் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஆகிய இரண்டின் பங்கு (PV + BESS) மொத்த நிறுவப்பட்ட திறனில் 90.6% ஆகும்.
அதிக BESS திறன் ஆனது சத்தீஸ்கரில் நிறுவப்பட்டது என்பதோடு இது ஒட்டு மொத்த நிறுவப்பட்ட திறனில் 54.8% ஆகும்.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி நாட்டின் செயல்பாட்டில் உள்ள மோட்டார் விசை இயக்கி மூலம் இயங்கும் நீர் மின்னாற்றல் சேமிப்புத் திறன் மொத்தம் 3.3 ஜிகா வாட் ஆகும்.
நாட்டின் செயல்பாட்டில் உள்ள திறனில் கிட்டத்தட்ட 76% ஆனது தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளத்தில் நிறுவப்பட்டுள்ளது.