‘இந்தியாவிற்குள்ளேயே திருமணம் செய்துகொள்ளுங்கள்’ என்ற கருத்து
April 5 , 2024 626 days 446 0
நாட்டின் வளம் நாட்டிற்குள்ளேயே இருக்க, திருமணம் செய்து கொள்ள விரும்பும் தம்பதிகளை இந்தியாவிற்குள்ளேயே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று பிரதமர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் வெளிநாட்டின் கண்கவர் பகுதிகளில் நடைபெறும் நடைமுறை சார்ந்த திருமணங்கள் 5,000க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் நடைபெறுவதாக அதிகாரப் பூர்வமற்ற மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அவற்றிற்கான மொத்தச் செலவினம் 75,000 கோடி ரூபாய் முதல் 1 லட்சம் கோடி ரூபாய் வரை ஆகும்.
சமீபத்திய அதிக திருமணங்கள் நடைபெறும் காலகட்டத்தில் நடைபெற்ற ஆறு லட்சம் திருமணங்களில் திருமணம சார்ந்த கொள்முதல்கள் மூலம் சந்தையில் சுமார் 4.25 லட்சம் கோடி ரூபாய் பணம் புழக்கத்தில் இருந்ததாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு குடும்பத்தின் ஒரு திருமணத்தையாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் நடத்துமாறு தொழிலதிபர்களைப் பிரதமர் அவர்கள் வலியுறுத்தினார்.
இது இந்த மலைப் பிரதேச மாநிலத்தினைத் திருமணம் நடத்தப் படுவதற்கு என்று ஒரு விருப்பமிகு இடமாக மாற்ற உதவும்.