TNPSC Thervupettagam

‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ பிரச்சாரம்

December 13 , 2025 26 days 102 0
  • குடிமக்கள் உரிமை கோரப்படாத நிதிச் சொத்துக்களை கோர உதவுவதற்காக இந்திய அரசு "உங்கள் பணம், உங்கள் உரிமை" பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்தப் பிரச்சாரம் Awareness, Accessibility and Action (விழிப்புணர்வு, அணுகல் மற்றும் நடவடிக்கை) என்ற 3A கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது.
  • அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள 477 மாவட்டங்களில் மாவட்ட அளவிலான முகாம்கள் நடத்தப்பட்டன.
  • இந்த இயக்கம் உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகை, காப்பீடு, ஊதியப் பங்கு, பங்குகள், பரஸ்பர நிதிகள் மற்றும் ஓய்வூதியத் தொகைகளை உள்ளடக்கியது.
  • உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகளுக்கு ரிசர்வ் வங்கியின் UDGAM, உரிமை கோரப்படாத காப்பீட்டுத் தொகைகளுக்கு IRDAIன் பீமா பரோசா மற்றும் உரிமை கோரப்படாத பரஸ்பர நிதிகளுக்கு SEBIன் MITRA போன்ற தற்போதைய தளங்கள், குடிமக்கள் தங்கள் உரிமை கோரப்படாதச் சொத்துக்களை மிகவும் திறமையாகக் கண்டறிய அதிகாரம் அளித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்