பிரதமர் தனது ஐக்கியப் பேரரசு பயணத்தின் போது நோர்போக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு ஒரு மரக்கன்றை பரிசளித்தார்.
இந்தச் செய்கையானது ‘ஏக் பெட் மா கே நாம்’ எனும் இந்தியாவின் பசுமை முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும் என்பதோடு இது பூமித் தாய்/ தாய்மார்கள் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புக்கு கௌரவமளிக்கும் வகையில் மரம் நடுவதை ஊக்குவிக்கிறது.
பரிசளிக்கப்பட்ட இந்த மரக்கன்று, டேவிடியா இன்வோக்ரடா ‘சோனோமா’ (சோனோமா புறா மரம்), முன் கூட்டியே பூக்கும் மற்றும் வெள்ளைப் பூவடிச் செதில்களுக்குப் பெயர் பெற்றது.