இது உயிரித் தொழில்நுட்பத் துறையின் முதலாவது ‘ஒன் ஹெல்த்’ திட்டம் ஆகும்.
இந்தக் கூட்டமைப்பானது இந்தியாவில் நிலவும் விலங்குவழி மற்றும் எல்லைக் கடந்த நோய்த் தொற்றுக் கிருமிகள், முக்கிய வைரஸ் கிருமிகள், பாக்டீரிய மற்றும் ஒட்டுண்ணி நோய்த் தொற்றுகளைக் கண்காணிப்பதற்கு அதிகாரம் பெற்றுள்ளது.
இந்தத் திட்டமானது தற்போதுள்ள நோய்க் கண்டறியும் சோதனை முறைகளின் பயன்பாட்டினைக் கண்காணித்தல் மற்றும் புதிதாக உருவாகும் நோய்களின் பரவலைக் கண்காணித்தல் மற்றும் புரிந்து கொள்வதற்கான கூடுதல் செயல்முறைகளை உருவாக்குதல் போன்றவற்றையும் மேற்கொள்ளும்.