‘கவாச்’ என்ற பெரிய அளவிலான கூட்டு ராணுவப் பயிற்சியை அந்தமான் நிக்கோபார் இராணுவப் பிரிவு (ANC)‘ நடத்தியது.
இது தரைப் படை, கடற்படை, விமானப் படை மற்றும் கடலோரக் காவல்படை ஆகியவற்றின் சொத்துக்களை உள்ளடக்கியது.
இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாக்கச் செய்வதற்கும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பாதுகாப்பை உறுதி செய்திடுவதற்கும் வேண்டி ஆயுதப் படைகளின் செயல்திறன்களைத் தயார்நிலையில் வைப்பதற்கான நடவடிக்கைகளை இது வெளிப்படுத்தியது.