கோல்கொண்டா நீலம் எனப்படும் இந்திய நாட்டினைச் சேர்ந்த மிகப்பெரிய அறியப் பட்ட பொலிவுமிகு நீல நிற வைரமானது சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவின் ஒரு ஏலத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.
23.24 காரட் அளவிலான பேரிக்காய் வடிவ வைரம் ஆனது, ஒரு காலத்தில் இந்தூரை ஆட்சி செய்த மகாராஜா யஷ்வந்த் ராவ் ஹோல்கருக்கு (1908-1962) சொந்தமானது.
தற்போது இதன் மதிப்பு 35 முதல் 50 மில்லியன் டாலர் வரை இருக்கலாம்.
இது தற்போதையத் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோல்கொண்டா என்ற வைரச் சுரங்கத்தில்உருவானது.
கோஹினூர் மற்றும் தரியா-ஐ-நூர் போன்ற உலகின் மிகச்சிறந்த வைரங்கள் இந்த கோல்கொண்டாவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது வைரங்கள் தொடர்பான தொழிற்துறையில் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா ஆகிய சில முக்கியநாடுகள்ஆகும்.