‘பெயர் மற்றும் அவமானம்’ குறித்த அறிவிப்புகளை நீக்க நீதிமன்ற உத்தரவு
March 12 , 2020 1990 days 652 0
சர்ச்சைக்குரிய ‘பெயர் மற்றும் அவமானம்’ குறித்த அறிவிப்புகளை உடனடியாக அகற்றுமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் லக்னோ நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிவிப்புகளில் குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காணும் வகையில் லக்னோ நகர் முழுவதும் காவல்துறையினர் பல அறிவிப்புகளை வைத்துள்ளனர்.
அலகாபாத் உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து இந்தச் செயல் குறித்து விசாரித்தது.
இது இந்திய அரசியலமைப்பின் 21வது சரத்தையும் மீறுவதாக அமைந்துள்ளது.
மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973ன் படி, ஒரு நபரின் தனிப்பட்ட பதிவுகளை பொதுவெளியில் காண்பிப்பதற்கான எந்தவொரு அதிகாரமும் காவல்துறை அல்லது நிர்வாக அதிகாரிகளுக்கு வழங்கப் படவில்லை.