TNPSC Thervupettagam

‘மேரி பாலிசி மேரி ஹாத்’

February 23 , 2022 1402 days 700 0
  • வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமானது ‘மேரி பாலிசி மேரி ஹாத்’ என்ற திட்டத்தைத் தொடங்க உள்ளது.
  • இது பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் பயிர்க் காப்பீட்டு அம்சங்களை அவர்களது வீடு தேடிச் சென்று வழங்குவதற்கான ஒரு திட்டம் ஆகும்.
  • அனைத்து விவசாயிகளும் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவின் கீழ் தங்களது காப்பீட்டு அம்சங்கள், நில ஆவணங்கள், உரிமை கோரல் மற்றும் குறை தீர்ப்பு ஆகியவை பற்றிய அனைத்துத் தகவல்களையும் அறிந்திருப்பதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் ஒரு நோக்கமாகும்.
  • பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டமானது இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பயிரிழப்பு/சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
  • இது மத்தியப் பிரதேசத்தின் சேஹோர் என்னுமிடத்தில் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்