‘விருப்பப் பட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்தல்' என்ற சொல்
May 27 , 2023 816 days 368 0
சமீபத்தில் இந்தியத் தலைமை நீதிபதி சந்திரசூட் தமக்கு ‘விருப்பப் பட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்தல் ’ என்ற முறையினைக் கண்டித்துள்ளார்.
மனுதாரர்கள் அல்லது வழக்கறிஞர்கள் வேண்டுமென்றே தங்கள் வழக்கை ஒரு குறிப்பிட்ட நீதிபதி அல்லது நீதிமன்றம் மூலம் விசாரிக்க முயற்சிக்கும் போது, அந்தத் தீர்ப்பு அவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்பதை அந்த வார்த்தை விவரிக்கிறது.
உச்ச நீதிமன்றம் 1988 ஆம் ஆண்டு ‘சேதக் கன்ஸ்ட்ரக்சன் லிமிடெட் எதிர் பிரகாஷ்’ என்ற வழக்கின் தீர்ப்பில், “ஒரு வழக்குரைஞர் தனக்கு விருப்பப் பட்ட நீதிமன்றத்தைத் தேர்வு செய்ய அனுமதிக்க முடியாது” என்றது.