2035 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய இறுதி ஆற்றல் தேவையில் மின்சாரத்தின் பங்கை 35% ஆக உயர்த்துவதற்கான “35க்கு 35” (“35 by 35”) இலக்கை COP31 இணைத் தலைமையான ஆஸ்திரேலியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முன்மொழிந்துள்ளன.
ஜெர்மனியின் பான் நகரில் நடைபெற்ற பான் பருவநிலைக் கூட்டத்தில் இந்த முன் மொழிவு அறிவிக்கப்பட்டது.
தற்போதைய உலகளாவிய இறுதி ஆற்றல் நுகர்வான சுமார் 20-23% என்ற அளவிலிருந்து மின்சாரத்தின் பங்கை உயர்த்துவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
கட்டிடங்கள், போக்குவரத்து மற்றும் தொழில்துறை போன்ற துறைகளில் மின் மயமாக்கலை அதிகரிப்பதில் இந்த இலக்கு கவனம் செலுத்துகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலைச் செயல்முறையின் கீழ் பிணைக்கப்படாத முன்னெடுப்பான COP31 செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இது உள்ளது.
உலக வெப்பமயமாதலை 1.5°C ஆகக் கட்டுப்படுத்தும் பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கிற்கு இந்த முன்மொழிவு ஆதரவளிக்கிறது.