இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையேயான “Hand in Hand” என்ற கூட்டு இராணுவப் பயிற்சியின் 2019 ஆம் ஆண்டுப் பதிப்பானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மேகாலயாவின் ஷில்லாங்கிற்கு அருகில் உள்ள உம்ரோயில் நடைபெறவிருக்கின்றது.
இது தீவிரவாத எதிர்ப்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் இரண்டு வார காலப் பயிற்சியாகும்.
இது சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து தலா 120 இராணுவ வீரர்களைக் கொண்டு நடைபெறும் ஒரு படை அளவிலான பயிற்சியாகும்.